வாசகர்கள் பேசுகிறார்கள்

நவம்பர்-டிசம்பர் 2015

1. Greetings in Jesus Name, We are regularly getting your Anuthinamum Christhuvudan. This time only we got your Magazine little late. We read the daily devotion early in the morning and get the word of God for that day. It is very useful to our spiritual life. we are remembering you all and also your mightful Ministry in our prayers.

Mr.Mathews,Vellore.

2. தங்கள் பத்திரிக்கைப்பணிகள், வானொலி மற்றும் தொலைக்காட்சிப் பணிகள் ஆண்டவரின் வாக்குப்படி அநேகரை மீட்புக்குள் கொண்டுவரும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. அனுதினமும் கிறிஸ்துவுடன் 2015 செப்டம்பர் மாதத்திற்குரிய தியானப்பகுதியில் சகோதரி ஜெபி பீடில் அவர்களின் சிறுசிறு நிகழ்வுகள், குறிப்புகளினூடே தொகுத்த தியானச் செய்திகளைப் படிப்பவர்கள் அனைவரின் உள்ளத்தையும் ஊடுருவி உய்விக்கும் என்று விசுவாசிக்கிறேன். எல்லா நலமும் ஞானமும் அவருக்கு வழங்க இறைமகன் இயேசுவிடம் மன்றாடுகிறேன். அனைத்து இதழ்களும் தவறாமல் கிடைக்கின்றன. நன்றி.

Mr.G.Dhanraj, Coimbatore.

3. சத்தியவசன சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் பத்திரிக்கை வாசிப்பது மனதுக்கு சந்தோஷமாய் இருக்கிறது. சத்தியவசன ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mrs.Mabel Jose, Coimbatore.

4. சத்தியவசனம் மாத பத்திரிக்கை அனைத்தையும் வாசித்து பயன்பெறுகிறோம். எங்களுக்கு ஆறுதலாகவும் வேதவாசிப்பு ஜெபம் முதலியவற்றில் தொடர்ந்து ஜீவிக்கவும் தேவன் கிருபை அளிக்கிறார். ஒவ்வொருநாளும் ஊழியத்திற்காக ஜெபிக்கிறேன்.

Mrs.Leelabai, Madurai.

5. I have been faithpartner for more than 30 years. I am listening to the Sathiavasanam Program every sunday. No wonder it is awesome and amazing. The sermons given by Evg. Susi prabakaradoss is very instructive bearing hidden treasures in the word of God. May God shower His Blessings abundantly enlarging the border of this ministry.

Mrs.Hepzibah Beulah, Madurai.

6. ஒவ்வொரு ஞாயிறும் ஒளிபரப்பாகும் சத்தியவசன நிகழ்ச்சியைப் பார்த்து வருகிறோம். சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் தாவீதுராஜாவைக் குறித்து கொடுத்த செய்தி மிக அருமை. வேதநாயகம் சாஸ்திரியார் அவர்கள் பாடுகிற பாடல்கள் மிக அற்புதம்.

Mr.Joseph Xavier, Madurai.

7. இயேசுகிறிஸ்துவின் இனியநாமத்தில் வாழ்த்துக்கள். தமிழன் டிவியில் ஒளிபரப்பான சத்தியவசன நிகழ்ச்சியில் சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்களது தேவசெய்திகளை கேட்டு மகிழ்ந்தோம். எளிய இனிய முறையில் மிகச் சிறப்பாக ஒரு மாணவனுக்கு ஒரு ஆசிரியர் பாடம் நடத்துவது போன்று தான் சொல்வதை நம் மனதில் நிரந்தரமாக பதியும்படி செய்திகளை வழங்கி வருகிறார்கள். கர்த்தர்தாமே சத்தியவசன ஊழியங்களை ஆசீர்வதிக்க ஜெபிக்கிறோம்.

Mr.R.S.A.Sundersingh, Tirunelveli.

8. Greetings in the name Lord Jesus Christ, Thank you very much for Sathiyavasanam. I am getting regularly the devotion book.

Mr.Caleb Joshua, Chennai.

சத்தியவசனம்