வாசகர்கள் பேசுகிறார்கள்

மார்ச்-ஏப்ரல் 2017

1. Dear Brother in Christ, Your Literatures and Magazines have been helpful to me right from the college days. Those years you used to send a book almost every month and all of them were gems and formed the basic christian doctrine in my life. Though I was saved during my college days through UESI. I owe much to you for the spiritual growth. Today I am able to take Bible classes in the EGF and churches because of this foundation. I am really thankful for this forever, continue your good work.

Dr.V.Sam William, Manathavady.


2. Praise the Lord. I am D.Stanley. It’s the First time we are watching your TV program, its really great blessing for us. If you have monthly Magazine kindly send to us.

Mr.D.Stanley, Chennai.


3. அன்பு சகோதரருக்கு, அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகம் எங்கள் அனுதின வாழ்க்கைக்கு அதிக பிரயோஜனமாக உள்ளது. எங்களது குடும்ப ஜெபத்தில் இந்த தியானபுத்தகத்தை பயன் படுத்துகிறோம். உங்கள் ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோம்.

Mrs.Menaga George, Coimbatore.


4. சத்தியவசன காலண்டர் பெற்றுக்கொண்டேன். மிக்க மகிழ்ச்சி. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானப்புத்தகத்தில் பிரசுரமாகும் அட்டவணைப்படி 2016 ஆம் ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை மறுபடியும் ஒருமுறை வெற்றிகரமாக வாசித்து முடிக்க ஆண்டவர் கிருபையாகத் துணைநின்று அருள்செய்தார் என்பதை மனநிறைவோடு தேவனுக்கு கோடானகோடி துதிகளை ஏறெடுத்து தெரிவிக்கிறேன். தினசரி சிறப்பான தியானங்களை மிக நேர்த்தியாகத் தயாரித்து வழங்கி வரும் ஊழியர்கள் அனவைருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

Mrs.Chandrabai Paul, Chennai.


5. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானம் அதிக பிரயோஜனமாக உள்ளது. ‘விருத்தாப்பியம்’ புத்தகம் மிக அருமையாக இருந்தது. தேவன் ஊழியங்களை, தியானங்களை எழுதும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக.

Mrs.Gunaselvi Malliga, Udumelpettai.


6. சத்தியவசன ஊழியம், புத்தகங்கள் காலண்டர் யாவும் நன்றாக உள்ளது. தொடர்ந்து ஊழியம் மேன்மேலும் நன்றாக வளர்ச்சியடையவும், அநேகருக்கு ஆசீர்வாதமாக அமையவும் ஜெபிக்கிறோம். யாவரின் ஜெபத்தினால் மூத்தமகளின் திருமணம் சிறப்பாக நடந்தது.

Mrs.Carline Rathinadoss, Katpadi.


7. கர்த்தருடைய பெரிதான கிருபையால் வேதவாசிப்பு அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடிக்க கர்த்தர் உதவி செய்தார். 2017ஆம் ஆண்டும் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். எனக்கு 79 வயதாகிறது. வாசிக்கமுடிகிறது. ஞாபகம் வைக்கத்தான் முடியவில்லை. வசனங்களை எழுதிவைத்து அடிக்கடி வாசிப்பேன். மனப்பாடம் பண்ணினால் மறந்துவிடுகிறது. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானம் தினமும் வாசிப்பேன். அதிக பிரயோஜனமாக இருக்கிறது. சத்தியவசன இருமாத இதழ் உபயோகமாக இருக்கிறது. சத்தியவசன ஊழியங்களுக்காக அனுதினமும் ஜெபிக்கிறேன்.

Mrs.Leela Packianathan, Tuticorin.

சத்தியவசனம்