வாசகர்கள் பேசுகிறார்கள்

ஜனவரி-பிப்ரவரி 2019

[1]
நாங்கள் ஞாயிறுதோறும் சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளை தவறாமல் பார்த்து மகிழ்கிறோம். திரு.எடிசன், சுவி.சுசி பிரபாகரதாஸ், சகோ.பிரகாஷ் ஏசுவடியான், பாகவதர் சாஸ்திரியார் மற்றும் கலாநிதி தியோடர் வில்லியம்ஸ் அவர்களின் தேவசெய்தியைக் கேட்டு சந்தோஷமடைகிறோம். சத்தியவசனம், அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழ்களுக்காக ஒவ்வொரு மாதமும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பேன். எங்கள் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் அனுதினமும் கிறிஸ்துவுடன் வேதவாசிப்புடன் எங்கள் குடும்ப ஜெபத்தில் பயன்படுத்துகிறோம். இந்த இரு இதழ்களுக்காகவும் தேவசெய்தி எழுதுபவர்களுக்காகவும் விசேஷமாக சகோதரி சாந்தி பொன்னு அவர்களுக்காகவும் ஜெபித்து வருகிறேன்.

Mrs.Menaka George, Coimbatore.


[2]
Greetings in Jesus precious Name, we thank God for your Ministry and for the word that goes forth all over. May everyone we blessed.

Mr.Cecil koilpillai, Chennai.


[3]
சத்தியவசன ஊழியத்தின் வெளியீடான பத்திரிக்கைகள் அனுதினமும் கிறிஸ்துவுடன் தொடர்ந்து அனுப்பித் தாருங்கள். வேத வசன அட்டவணைப்படி வேதத்தைப் படிப்பதற்கும் இயேசுவோடுள்ள தொடர்பிலே நிலைத்திருப்பதற்கும் தியானபுத்தகம் மிகவும் பயனுள்ளதாகவும், ஒரு வருடத்திற்குள் வேதத்தை வாசித்து முடிப்பதற்கு நல்ல வழிகாட்டியாகவும் இருக்கிறது. தேவன் கொடுத்த சத்தியவசன ஊழியங்களுக்காக கோடாகோடி ஸ்தோத்திரம்.

Mrs.C.Gnana Arasi, Coimbatore.


[4]
தமிழன் டிவியில் நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறோம். சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகளையும் தவறாமல் கேட்டு வருகிறோம். மிகவும் ஆசீர்வாதமாக உள்ளது.

Mrs.Soundrarani, Idayankulam.


[5]
ஐயா, அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகத்தில் பிரசுரமாகும் அட்டவணைப்படிப் பரிசுத்த வேதாகமத்தை 2018ஆம் ஆண்டில் மறுபடியும் ஒருமுறை வாசித்து முடிக்க தேவாதி தேவன் கிருபை செய்தார் என்பதை நன்றியோடு தெரிவிக்கிறேன். வேதவாசிப்புப் பகுதிகளைக் கருத்தாக வாசித்து தியானிக்கும்போது அளவிடமுடியாத ஆனந்தம், மன அமைதி, தன்னம்பிக்கை, தைரியம் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு ஒவ்வொரு புதிய நாளுக்குள்ளும் பிரவேசிக்கிறேன் என்பதை சாட்சியாகக் கூறிக்கொள்கிறேன். சத்தியவசன ஊழியங்களை தேவன் மேன்மேலும் வர்த்திக்கப்பண்ணி வழிநடத்த ஜெபிக்கிறேன்.

Mrs.Chandrabai Paul, Coimbatore.

சத்தியவசனம்