வாசகர்கள் பேசுகிறார்கள்

ஜூலை-ஆகஸ்டு 2013

1. Thank you very much for sending me your bimonthly devotional book. Anuthinamum Christhuvudan and your Magazine sathiyavasanam regularly to me. I am thanking God for this wonderful ministries through you. I am also praying for you and your ministries. Hope and pray God will bless your ministries abundantly in the coming days.

B.Jasper Mohan, Chennai.

2. We have been receiving your Anuthinamum Christhuvudan and Sathiyavasanam bimonthly Magazine regularly. They are a great blessings to us.

Mr.G.Milray Paul, Chennai.

3. Your book Anuthinamum Christhuvudan and Sathiyavasanam Magazine is worth reading. Good for Spiritual Life. May God bless you.

Mr.S.D.Isaac, Tuticorin.

4. தாங்கள் அனுப்பும் சத்தியவசனம் மற்றும் அனுதினமும் கிறிஸ்துவுடன் இந்த இரண்டு புத்தகங்களும் எனக்கு தினமும் தேவன் என் இருதயத்துக்கு ஏற்றபடி பேசுவதுபோல் மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது. இம்மாத சத்தியவசன சஞ்சிகையில் ‘பரிசுத்த வேதாகமம் பொக்கிஷ பேழை’ மற்றும் ‘ஆண்டவருடைய வார்த்தை அழியாதது’ என்ற கட்டுரைகள் ஆசீர்வாத மானது. இதில் ஹரி ரிம்மர் குறிப்பிட்டதுபோல ‘அனைத்து எதிர்ப்பு சக்திகளையும் ஜெயித்து இன்றுவரை அழியாமலுள்ளது’ என்ற வார்த்தை மனதுக்கு மிகவும் ஆறுதலையும் சந்தோஷத்தையும் தருகிறது. வேதம் எனக்கு மிகவும் இனிமையாயிருக்கிறது என்பதை தாழ்மையுடன் தெரியப்படுத்துகிறேன்.

Mrs.Sundary, Madurai.

5. உங்கள் செய்தியை இன்று தொலைகாட்சி நிகழ்ச்சியில் கேட்டேன். அன்பைப் பற்றி மிக அழகாக வேத வசனத்துடன் பேசினீர்கள். மிக நன்றாக நேர்த்தியாக உள்ளது. நீங்கள் வெளியிடும் மாத இதழ் அனுப்பி வைக்கவும்.

Mrs.S.Stella, Trichy.

6. நான் சத்தியவசனம் பத்திரிக்கைகள் வாசிப்பதிலும், கேள்விகளுக்கு விடை எழுதுவதிலும் மிகுந்த ஆர்வமுள்ளவள். சத்தியவசன பத்திரிக்கைகள் அதிக ஆசீர்வாதமாக உள்ளது. கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியங்களையும் ஆசீர்வதித்து மேன்மைப்படுத்துவாராக.

Mrs.Beulah Abraham, Bangalore.

7. அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசன சஞ்சிகைகள் தவறாமல் தொடர்ந்து கிடைத்து வருகிறது. மிக்க நன்றி. அவைகள் எங்களுக்கு அதிக பிரயோஜனமாக இருக்கிறது. ஞாயிற்றுக் கிழமை பகல் 12 முதல் 12:30 வரை தமிழன் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. தேவன் தாமே உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக.

Mr.Sali Benjamin, Ooty.

8. நான் சத்தியவசனம், அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகங்களை அநேக வருடங்களாக வாங்கிக் கொண்டிருக்கிறேன். வேத வினாவில் கலந்துகொள்வதற்காக வெகு ஆவலுடன் சத்தியவசனம் புத்தகத்திற்காக காத்துக்கொண்டிருப்பேன். சத்தியவசன வெளியீடுகள் அனைத்தும் ஆத்தும வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. இதில் எழுதும் அனைத்து ஆசிரியர்களுக்காகவும் விசேஷமாக சாந்தி பொன்னு அவர்களுக்காக, ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Sis.Menaka George, Coimbatore.

சத்தியவசனம்