ஜெபக்குறிப்பு: 2019 ஜனவரி 8 செவ்வாய்

சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர் (சங்.46:7) வாக்குப்பண்ணின தேவன்தாமே பிரசவத்திற்கு காத்திருக்கும் சகோதரிகளோடுகூட இருந்து சுகப்பிரசவத்தைத் தந்தருளவும், பிள்ளைகள் ஒலிவமரக் கன்றுகளைப்போல வளரவும் வேண்டுதல் செய்வோம்.