ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 25 வியாழன்
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார் (1சாமு.2:8) நமது பங்காளர் குடும்பங்களிலே எளிமையான சூழ்நிலையில் கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் படிப்பிலும் மற்றும் வேலைக்கான எல்லாத் தகுதிகளிலும் நல்ல தேர்ச்சியடைந்து சிறந்த வேலைகளில் அமர்ந்து கர்த்தர் நாமத்தை மகிமைப்படுத்த ஜெபிப்போம்.