ஜெபக்குறிப்பு: 2020 பிப்ரவரி 1 சனி
கர்த்தாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும் (சங்.85:7).
உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும் (ஏசா. 58:8) இம்மாதத்திலும் கர்த்தருடைய பராமரிப்பினால் நாம் போஷிக்கப்பட, ஆதரிக்கப்பட, கர்த்தருக்கு முன்பாக உத்தமமாய் நடந்துகொள்வதற்கு பெலன் வேண்டியும் நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.