ஜெபக்குறிப்பு: 2020 ஆகஸ்டு 11 செவ்வாய்
ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன் (யாக்.1:6) படிப்பிலே ஞாபகசக்தி மற்றும் ஞானத்தில் குறைவுள்ள பங்காளர் குடும்பத்தின் பிள்ளைகள் அனைவருக்காகவும் விசுவாசத்தோடே ஜெபிப்போம். ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய கர்த்தர்தாமே பிள்ளைகளோடு கூட இருந்து அவர்களை ஆசீர்வதிக்க மன்றாடுவோம்.