ஜெபக்குறிப்பு: 2020 செப்டம்பர் 14 திங்கள்

நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள் (மத்.28:20). நம்பிக்கை டி.வியில் ஞாயிறு மதியம் 12:30 மணிக்கும், தமிழன் டி.வியில் திங்கள் காலை 6:30 மணிக்கும் ஒளிபரப்பாகிவரும் சத்தியவசனம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆசீர்வதிக்கவும் இந்நிகழ்ச்சிக்கான தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.