ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 2 புதன்
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப் பண்ணுவார் (சங்.37:5). இம்மாதம் முழுவதும் நடைபெறுகிற சத்தியவசன ஊழியப் பணிகள் அனைத்தும் ஆசீர்வதிக்கப்படவும் அநேகமாயிரம் ஆத்துமாக்கள் ஆவிக்குரிய நன்மைகளை அடையவும் மீட்கப்படவும் மன்றாடுவோம்.