ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 17 வியாழன்
இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ? (எரேமி.32:27) இவ்வாக்குப்படியே சர்வவல்லமையுள்ள தேவன் குழந்தைப் பாக்கியத்திற்காக ஜெபிக்கக்கேட்ட ஒவ்வொருவருக்கும் அற்புதத்தைச் செய்து கர்ப்பத்தின் கனியால் அவர்கள் குடும்பங்களை ஆசீர்வதித்திட மன்றாடுவோம்.