செப்டம்பர்-டிசம்பர் 2020
[1]
கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான சகோதரர் அவர்களுக்கு ஸ்தோத்திரம். அனுதினமும் கிறிஸ்துவுடன் மற்றும் சத்தியவசனம் சஞ்சிகையை எனக்கு அனுப்பியிருந்தீர்கள். எனக்கு அதிக பயனுள்ளதாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்கிறது, மிக்க நன்றி.
Sis.Hepzibah, Madurai.
[2]
அன்பான சகோதரர் அறிவது, சத்தியவசன சஞ்சிகையில் (மார்ச்-ஏப்ரல்) வெளிவந்த Dr.தியோடர் எச்.எஃப். அவர்கள் எழுதிய குணமாக்குதலும் விசுவாச ஜெபமும் கட்டுரை மிகவும் ஆறுதலாக இருந்தது. கர்த்தருடைய இராப்போஜனத்தில் அபாத்திரராய் போஜனம் பண்ணுகிறதால் வருகிற ஆபத்தை நினைவூட்டிய எச்சரிப்பின் செய்திகள் மிகவும் அருமை. இவ்வூழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.
Mrs.Sundariammal, Madurai.
[3]
Sathiyavasanam your Tv in Tamilan Tv & Namabikkai Tv programs are very meaning ful & attractive in a spiritual manner. Rev.Sam Kamaleson, Dr.Pushparaj messages are spirtual Nourishment to the viewers. God bless your Ministry.
Mr. & Mrs.John C Sanandam, Pollachi.
[4]
அன்பான சத்தியவசன பத்திரிக்கை ஆசிரியருக்கு, தங்களது இரண்டு மாதாந்திர ஏடுகளும் எனக்கும் நான் சார்ந்திருக்கும் கத்தோலிக்க திருச்சபை நண்பர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் இரண்டு ஏடுகளும் என்னை இன்னும் கிறிஸ்துவுக்குள் ஆழமாய் அறிந்துகொள்ள மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தங்கள் நிர்வாகத்தின் கீழ் எனக்கு கிடைக்கப்பெற்ற ஆவிக்குரிய புத்தகங்களை என் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளேன். மிகவும் சந்தோஷப்பட்டார்கள். அனைத்தும் பொக்கிஷங்கள்.
Mr.S.Thangaraj, Chennai.