ஜெபக்குறிப்பு: 2021 மார்ச் 14 ஞாயிறு
இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென். (ரோம.9:5) கடந்த ஆண்டிலே லெந்து நாட்களில் ஆலயங்களுக்கு செல்லமுடியாமல் அடைபட்டிருந்தோம். இவ்வாண்டிலே தேவன் அளித்த வாய்ப்புகளுக்காகவும் திறந்த வாசலுக்காகவும் நன்றி செலுத்தி, சர்வத்திற்கும் மேலான தேவனை முழு உள்ளத்தோடும் ஆராதனை செய்வோம்.