ஜெபக்குறிப்பு: 2021 மே 15 சனி

…சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக (1சாமு.1:17) இருதயத்தை ஊற்றி ஜெபித்த அன்னாளுக்கு சமாதானத்தை அருளிச்செய்த தேவன்தாமே இந்நாட்களில் சமாதானக் குறைவுகளோடு உள்ள பங்காளர் குடும்பங்களுக்கு உதவி செய்திடவும், பிரிவுகளோடு உள்ள குடும்பங்கள் ஒன்றுசேர பாரத்துடன் ஜெபிப்போம்.