ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 8 வியாழன்

பிரசவிக்கப் பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார் (ஏசா.66:9) பிரசவத்திற்காய் காத்திருக்கும் பங்காளர் குடும்பங்களில் உள்ள சகோதரிகள் யாவரையும் கர்த்தர்தாமே பெலப்படுத்தி உற்பவ காலத் திட்டத்தில் சுகப்பிரசவத்தைத் தந்து தாய் சேய் இருவரையும் தமது கரத்தின் நிழலால் மூடி பாதுகாக்க வேண்டுதல் செய்வோம்.