ஜெபக்குறிப்பு: 2021 ஆகஸ்ட் 9 திங்கள்

உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள் … நன்மை செய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள் (ஏசா.1:16,17) சத்தியவசன விசுவாசப் பங்காளர் குடும்பங்களில் ஆவிக்குரிய வாழ்க்கைக்காக ஜெபிக்கக் கேட்ட ஒவ்வொருவரும் பாவங்கள் கழுவி சுத்திகரிக்கப்பட்ட அனுபவத்தோடு, கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடப்பதற்கு ஆவியானவர் பெலன் தரும்படியாக மன்றாடுவோம்.