ஜெபக்குறிப்பு: 2021 செப்டம்பர் 28 செவ்வாய்

பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது (லூக்.1:13) சகரியாவுக்கு அருளப்பட்ட இவ்வாக்கு குழந்தை பாக்கியத்திற்காக ஜெபித்துக்கொண்டிருக்கும் பங்காளர் குடும்பத்தின் பிள்ளைகளுக்கும் கர்த்தர் தந்து, குறித்த காலத்திலே தம்முடைய வாக்கை கர்த்தர் நிறைவேற்றி சந்தோஷமும் மகிழ்ச்சியும் அக்குடும்பங்களில் நிறையச் செய்வதற்கு மன்றாடுவோம்.