ஜெபக்குறிப்பு: 2022 ஜுன் 12 ஞாயிறு

ஆயிரம் நாளைப் பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரேநாள் நல்லது (சங்.84:10) இவ்விதமான வாஞ்சையோடு ஆலய ஆராதனைக்கு விசுவாசிகள் திரளாக சென்று கர்த்தரை ஆராதிப்பதற்கும், கர்த்தருடைய நாமத்திற்கு அபகீர்த்தியுண்டாக்குகிற செயல்கள் சபைகளை விட்டு முற்றிலுமாக நீங்கிப்போவதற்கும் சபைகள் சமாதானம் பெற்று பக்தி விருத்தியடைய மன்றாடுவோம்.