ஜெபக்குறிப்பு: 2022 அக்டோபர் 12 புதன்

என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடினால் … சேமத்தைக் கொடுப்பேன் (2நாளா.7:14) இந்தநாளில் நடைபெறும் சத்தியவசன ஜெபக் கூட்டத்தில் தேவனுடைய அளவற்ற பிரசன்னமும் மகிமையும் நிரம்பி காணப்படுவதற்கும் விண்ணப்பத்தின் ஆவியால் கர்த்தர் நிரப்பி ஜெப கூடுகை கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமையாய் நடைபெற ஜெபிப்போம்.