ஜெபக்குறிப்பு: 2023 ஜனவரி 13 வெள்ளி

என் நாமத்தினிமித்தம் அவர்கள் உங்களைப் பிடித்து … சிறைச்சாலைகளுக்கு ஒப்புக்கொடுத்து துன்பப்படுத்துவார்கள் (லூக்.21:12) இவ்வாக்குப்படியே நமது தேசத்திலே சுவிசேஷத்தினிமித்தமாய் சிறையில் வைக்கப்பட்டுள்ள ஊழியர்கள் விடுவிக்கப்படுவதற்கும், நீதியுள்ள நியாயாதிபதியாகிய தேவன் நித்திய சுவிசேஷத்தை அறிவிக்கும் பணியில் ஊழியர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாத்தருள ஜெபிப்போம்.