ஜெபக்குறிப்பு: 2023 ஜனவரி 8 ஞாயிறு
அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென் (1பேது.4:11) எங்கும் நடைபெறும் ஆராதனைகளில் பரிசுத்த ஆவியானவர் கிரியை நடப்பிக்கவும் திருச்சபைகளிலிருந்து நடைபெறும் கிராம ஊழியங்களில் அநேகர் உற்சாகமாக பங்குபெற்று நற்செய்தி அறிவிக்கப்பட்டிராத எல்லா இடங்களிலும் கிறிஸ்துவின் நாமம் அறிவிக்கப்பட வேண்டுதல் செய்வோம்.