ஜெபக்குறிப்பு: 2023 மார்ச் 2 வியாழன்

உம்மைத் துதிக்கிறோம், தேவனே, உம்மைத் துதிக்கிறோம் (சங்.75:1) கடந்த மாதங்களில் நம்மை சூழ இருந்த விக்கினங்கள், நாசமோசங்கள், ஆபத்துகளில் சேதமின்றி பாதுகாத்தபடியாலும், கர்த்தருடைய சந்நிதியிலே நாம் ஏறெடுத்த அநேக விண்ணப்பங்களுக்கு கர்த்தர் அருளிய ஆசீர்வாதங்களுக்காகவும் நன்மைகளுக்காகவும் நன்றி பலிகளைச் செலுத்தி கர்த்தரைத் துதிப்போம்.