ஜெபக்குறிப்பு: 2023 மார்ச் 7 செவ்வாய்

பிரசவிக்கப் பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார் (ஏசா.66:9) கர்ப்ப ஸ்திரீகளை கர்த்தர் பாதுகாத்து, கர்ப்பத்தின் கனியை பூரணப்படுத்தி, குறித்த நேரத்தில் சுகப்பிரசவத்தை தந்தருளி, தாயையும் சேயையும் நலமுடன் காணச்செய்வதற்கும் மருத்துவர்களுக்கு வேண்டிய விசேஷித்த ஞானத்தைக் கர்த்தர் தந்தருளவும் ஜெபிப்போம்.