ஜெபக்குறிப்பு: 2023 மே 4 வியாழன்

இதோ, நான் அவர்களுக்கு சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்குவேன் (எரேமி.33:6) பல்வேறு சரீரப் பெலவீனத்தோடு காணப்படுகிற பங்காளர்களுக்காகவும், இருதய நோய், கேன்சர், கொரோனா தொற்று மேலும் சொல்லி முடியாத வேதனைகளோடு மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றுவரும் ஒவ்வொருவருக்காகவும் பாரத்தோடு ஜெபிப்போம்.