ஜெபக்குறிப்பு: 2023 ஆகஸ்டு 8 செவ்வாய்

நான் அவர்களை நிலைப்படுத்தி, அவர்களை வர்த்திக்கப்பண்ணுவேன் (எசேக்.37:26) அமெரிக்க தேசத்திலுள்ள லிங்கன் நெப்ராஸ்காவிலிருந்து நடைபெறும் ஊழியப்பணிகளின் தேவைகள் சந்திக்கப்படவும், வசனத்தைப் போதிக்கும் ஊழியத்தில் அநேகர் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளவும் பல தேசங்களிலுமுள்ள மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டு கர்த்தரின் சித்தம் நிறைவேற ஜெபிப்போம்.