ஜெபக்குறிப்பு: 2023 ஆகஸ்டு 17 வியாழன்
என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன் (ஒசியா 8:12) அனுதினமும் கிறிஸ்துவுடன் சந்தாதாரர்கள், பங்காளர்கள் அனைவரும் தியானபுத்தகத்தின் அட்டவணையைப் பயன்படுத்தி 2023ஆம் வருடத்தில் பரிசுத்த வேதாகமத்தை முழுவதும் வாசித்து தியானிப்பதற்கும் வேதத்தின் இரகசியங்களைப் புரிந்துகொள்வதற்கும் சத்திய ஆவியானவர் பெலப்படுத்தும்படி ஜெபிப்போம்.