ஜெபக்குறிப்பு: 2023 ஆகஸ்டு 18 வெள்ளி

இரட்சிப்பு கர்த்தருடையது (சங்.3:8) 75 கோடி மக்கள் வாழும் ஐரோப்பா கண்டத்திற்காகவும் 52 நாடுகளில் வாழும் பல்வேறு நாட்டைச் சேர்ந்த மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுவதற்கும் ஜெபிப்போம். ஒவ்வொரு நாட்டின் ஆட்சியாளர்களுக்காகவும் ஒருமுறைகூட சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்கள் மற்றும் ஆண்டவரை அறியாத 21 சதவீதமான மக்கள் கிறிஸ்துவின் அன்பினால் தொடப்பட மன்றாடுவோம்.