ஜெபக்குறிப்பு: 2023 ஆகஸ்டு 13 ஞாயிறு
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது (ஏசாயா 6:3) பரிசுத்த அலங்காரத்துடனே இன்று கர்த்தரை தொழுதுகொள்ளவும், எதிர்ப்புகள் நிறைந்த இடங்களில் ஆராதனைக்கு விரோதமாய் எழும்புகிற சத்துருவின் கிரியைகள் அனைத்தும் செயலற்றுப் போவதற்கும், தேவ மகிமை ஆலயத்தை நிரப்ப வேண்டுதல் செய்வோம்.