ஜெபக்குறிப்பு: 2023 செப்டம்பர் 17 ஞாயிறு
அல்லேலூயா, கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள் (சங்.135:1) அனைத்துலகிலும் நடை பெறும் ஆராதனைகளில் பரிசுத்தமுள்ள தேவனின் நாமம் உயர்த்தப் படவும், திருச்சபை சார்ந்த பள்ளிகள் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் அனைவரும் பயிலும் மாணவர்களிடத்தில் கிறிஸ்துவின் அன்பை காண்பிக்கவும் சிறந்த தேர்ச்சிகளை மாணவர்கள் பெற ஜெபிப்போம்.