ஜெபக்குறிப்பு: 2023 டிசம்பர் 27 புதன்
என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நிய காரியமாக எண்ணினார்கள் (ஒசியா 8:12) வருடத்தின் இறுதி நாட்களில் வந்திருக்கிற நாம் நம்மை சோதித்து ஆராய்ந்து பார்த்து, வேதத்தை தியானிக்க மறந்த வேளைகளுக்காக வருந்தி மீண்டும் வேதத்திற்கு திரும்பவும், அவருடைய மகத்துவங்களை தியானிக்கவும் நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.