ஜெபக்குறிப்பு: 2023 டிசம்பர் 28 வியாழன்
பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள் (யோவேல் 1:14) தனிநபராக, திருச்சபைகளாக உபவாசநாட்களை நியமித்து இக்கடைசி நாட்களில் மாம்சமான யாவர்மேலும் கர்த்தர் தம்முடைய ஆவியை ஊற்றவும், நிர்விசாரத்தோடும் இருதய கடினத்தோடும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காகவும் திறப்பிலே நின்று ஜெபிக்க வேண்டுதல் செய்வோம்.