ஜெபக்குறிப்பு: 2024 ஜனவரி 22 திங்கள்
நமது சொந்தமொழியில் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து ஆசீர்வதிக்கப்பட காரணமாக உள்ள மிஷனெரிகளை நினைவுகூர்ந்து அவர்களை நமக்கு தந்த ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம். வேதாகமத்தை அச்சிடும் பணியிடங்களுக்காகவும் பிற மொழிகளில் வேதாகமத்தையும், புதிய ஏற்பாட்டையும் மொழிபெயர்க்கும் பணியில் உள்ள ஊழியர்களது சுகத்திற்காக, ஊழியத் தேவைகள் சந்திக்கப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.