வாசகர்கள் பேசுகிறார்கள் (மார்ச் – ஏப்ரல் 2024)
Praise the Lord Brother, By the Grace of God I received our devotional book … It was Great joy for me, Because every day this message gives me spiritual knowledge, strength, comfort, Warnings and guidance. I can’t express in words. Thanks God for this wonderful Ministry.
Mrs.Vasumathy, Vellore.
அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்தில் பிரசுரமாகும் அட்டவணைப்படி 2023 ஆம் ஆண்டில் வேதாகமத்தை வாசித்து முடிக்க கர்த்தர் கிருபை செய்ததற்காக ஸ்தோத்திரம். அனுதின வாழ்க்கைக்கு ஆசீர்வாதமாக உள்ளது.
Mr.Gurunath Rajasekeran, Chennai.
அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகம் தவறாமல் வருகிறது. நாங்கள் தினம் குடும்ப ஜெபத்தில் அதை வாசித்து பிரயோஜனமடைந்து வருகிறோம். மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது.
Mrs.M.Samuel, Nellikupam.
அன்பான சகோதரருக்கு, அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகம் எங்களுக்கு மிகவும் பிரயோஜனமாயிருக்கிறது. புது நம்பிக்கையையும் பெலனையும் தருகிறது.
Mr.T.J.W.Orijin, Kanyakumari.
Dear Brother in Christ, Thanks for all your books daily reading books in good messages, invitations. praying for your services. Thanks once again.
Mrs.Prema Johnson, Chithoor.
சத்தியவசன இருமாத கையேட்டில் தரப்படும் புதிரும், அதற்கு விடையளிக்கக் கொடுக்கப்படும் வேதபகுதியும் அருமை. ஏற்கனவே வாசித்திருந்தாலும் அநேக வசனங்களை நினைப்பூட்டும் வகையிலும், அநேக வசனங்களை கண்டுபிடிக்கும் வகையிலும் வினாக்கள் அமைந்துள்ளன. தேடி வாசித்து விடை எழுதுவது ஆசீர்வாதமாக உள்ளது. கர்த்தருக்குத் துதி.
Mrs.Nirmala Oliver, Chennai.
இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற தியானநூல் வாழ்விற்கு நம்பிக்கையூட்டுவதாகவும், ஆறுதலாகவும் உள்ளது. மேலும் இரவில் ஏதேனும் மனக்குழப்பமிருக்கும்பொழுது, அடுத்த நாள் காலையில் அதற்கான விடை இந்தநாளின் தியானத்தில் காணப்படுகிறது. வார்த்தையின் மூலமாக கர்த்தர் என்னோடு பேசுகிறார் என்பதை உணருகிறேன். மிக்க நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Mrs.Mercy, Chennai.
Praise the Lord, Really all your today’s posters (whatsapp) are so blessings and wonderful. Congrats and thank you so much brother.
Mr.Antony