ஜெபக்குறிப்பு: 2024 ஜுன் 1 சனி
நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள் (ரோமர் 12:12).
வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும் (ஏசா.35:1) என்ற வாக்குப்படி தேவன்தாமே இப்புதிய மாதத்தை ஆசீர்வதித்திட ஜெபிப்போம். இன்று 8 மாநிலங்களில் உள்ள 57 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெறவுள்ள கடைசி கட்ட தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிய பாரத்தோடு மன்றாடுவோம்.