ஜெபக்குறிப்பு: 2024 ஜுன் 30 ஞாயிறு

என் நாவு உமது நீதியையும், நாள்முழுதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும் (சங். 35:28) மாதத்தின் இறுதிநாளிலும் ஆராதனையில் பங்குபெறச் செய்த கர்த்தரை மகிமைப்படுத்துவோம். சங்கீதக்காரனோடு சேர்ந்து ஆயுள்முழுதும் என் நாவு உமது துதியைச் சொல்லிக்கொண்டிருக்கும் என கர்த்தருக்கு ஸ்தோத்திர பலிகளைச் செலுத்தி ஜெபிப்போம்.

அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார், நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் (ரோமர் 8: 26).