ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 23 செவ்வாய்

ஒரு ஜனத்துக்கானாலும் ஒரு மனுஷனுக்கானாலும் அவர் சமாதானத்தை அருளினால் யார் கலங்கப் பண்ணுவான்? (யோபு 34:30) நீண்டநாள் பகை, சமாதானமில்லாத நிலை இது போன்று குடும்பங்களுக்குள் உள்ள விரோதங்கள், கலகத்தினாலே அப்பாவி மனிதர்கள், குழந்தைகள்மேல் நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் தடுக்கப்படுவதற்கும், இந்த துர்ச்செயல்கள் தேசத்தில் எங்கும் நடைபெறாதபடி கர்த்தர் பாதுகாக்க ஜெபிப்போம்.