ஜெபக்குறிப்பு: 2024 செப்டம்பர் 21 சனி

கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச் சேர்ந்து மிகவும் தீவிரித்து வருகிறது (செப்ப.1:14) சமீபமாய் உள்ள கர்த்தருடைய வருகைக்கு கர்த்தருடைய பிள்ளைகள் விழிப்புள்ளவர்களாயிருந்து ஆயத்தத்தோடு காணப்படவும், கர்த்தர் வர காலதாமதமாகும் என எச்சரிப்புகளை அசட்டை செய்து இருதய கடினத்தோடு வாழ்கிறவர்களும் ஜாக்கிரதைப்பட ஆயத்தப்பட வேண்டுதல் செய்வோம்.