ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 8 வெள்ளி

உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன் (சங்.119:92) கர்த்தருடைய வார்த்தைகளை அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களின் வாயிலாக எளிதாகவும் தெளிவாகவும் கற்றுக்கொள்ளும்படி தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளை கர்த்தர் அதிகதிகமாய் தம் வல்லகரத்தில் எடுத்து உபயோகிக்க ஜெபிப்போம்.