ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 14 சனி

ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால், அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார் (யோவான் 12:26) உலகத்தின் பல நாடுகளிலும் சென்று அருட்பணி ஊழியம் செய்துவரும் சுமார் நான்கு லட்சத்து முப்பதினாயிரம் அருட்பணியாளர்களுக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துவோம். கர்த்தர் அக்கினியின் மதிலாயிருந்து அவர்களை எல்லா தீங்குக்கும் விலக்கி சுகத்தோடு பணி செய்ய ஜெபிப்போம்.