ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 21 சனி
நமது தாய்மொழியில் பரிசுத்த வேதாகமத்தைப் பெற்றுக்கொள்ள கர்த்தர் செய்த கிருபைகளுக்காக ஸ்தோத்திரம் செலுத்துவோம். இவ்விதமாக பரிசுத்த வேதாகமத்தை மொழிபெயர்க்கும் ஊழியங்களில் அர்ப்பணிப்போடு பணியாற்றும் ஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், குறித்த காலத்திற்குள் அச்சிடப்பட்டு வெளிவருவதற்கான தேவைகளுக்காகவும் ஜெபிப்போம்.