ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 21 வெள்ளி

ஈரோடு மாவட்டத்தில் கடுமையான எதிர்ப்புகள் மத்தியில் சுவிசேஷ ஊழியம் செய்யும் ஊழியர்களுடைய பாதுகாப்பிற்காகவும், மக்களை அடிமைப்படுத்தி வைத்துள்ள மந்திரவல்லமைகள் முற்றிலும் அழிக்கப்படவும் ஜெபிப்போம். பெரிய பரப்பளவைக் கொண்ட இம்மாவட்டத்தில் வேலைவாய்ப்புகள் அதிகம் ஏற்படுத்தப்பட்டு நெசவுதொழில் சிறந்த முன்னேற்றத்தை அடைய ஜெபிப்போம்.