ஜெபக்குறிப்பு: 2025 ஏப்ரல் 5 சனி

உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு (1நாளா.29:12) வல்லமையுள்ள தேவன் வேலைக்காக காத்திருக்கும் நபர்கள், வேலையை இழந்த நபர்கள், நிரந்தர வேலைக்காக பல ஆண்டுகளாக காத்திருப்பவர்கள் இதுபோன்று ஒவ்வொருவருக்கும் கர்த்தர் ஒத்தாசை அனுப்பவும் வேலைக்கான வழிவாசல்களை திறந்து தரவும் ஜெபிப்போம்.