ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 1 ஞாயிறு

இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது (1தெச.5:17,18).

கர்த்தர் எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் தக்கதாகவும், … கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம் பண்ணுவேன் (ஏசா. 63:7) இப்புதிய மாதத்தின் முதல் ஆராதனைநாளில் கர்த்தருடைய சமுகத்திற்கு வந்து தொழுதுகொள்ள கர்த்தர் கிருபை செய்திருக்கிறார். நமது கைப்பிரயாசங்கள், படிப்பு, வேலை, தொழில் அனைத்திலும் கர்த்தரின் ஆசீர்வாதம் காணப்பட அர்ப்பணித்து ஜெபிப்போம்.