ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 8 ஞாயிறு
அப்பொழுது ஜாதிகள் கர்த்தருடைய நாமத்துக்கும், பூமியிலுள்ள ராஜாக்களெல்லாரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள் (சங்.102:17) பயபக்திக்குரியவரை ஆராதிக்கும் அனைத்து ஆராதனை ஸ்தலங்களிலும் ஜனங்கள் பயத்தோடும் நடுக்கத்தோடும் கர்த்தரை சேவித்து வணங்கவும், இந்த நாளில் பெலவீனமடைந்துள்ள ஊழியர்கள் போதகர்களை கர்த்தர் நினைத்தருளவும் ஜெபிப்போம்.