ஜெபக்குறிப்பு: 2025 ஆகஸ்டு 15 வெள்ளி

இந்தியதேசம் எல்லாத் துறையிலும் சிறந்த முன்னேற்றத்தை அடைந்து மக்கள் தொகை அடிப்படையில் உலகநாடுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. நாட்டின் சுதந்திர தினத்தை அனுசரிக்கும் இன்று இந்திய திருநாட்டின் பாதுகாப்பிற்காகவும், திரளான ஜனத்தை ஆளும் ஞானமுள்ள இருதயத்தை தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு கர்த்தர் கிருபையாய் தந்தருளவும், தேசம் தேவனை அறிந்துகொள்ளவும் வேண்டுதல் செய்வோம்.