ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 26 ஞாயிறு

கர்த்தர் நல்லவர்; அவருடைய நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுங்கள்; அது இன்பமானது (சங்.135:3) இம்மாதம் முழுவதும் நடைபெற்ற ஆராதனைகளில் பங்குபெற தேவன் கிருபை செய்தபடியால் நன்றி செலுத்தி, ஆராதிக்க இடமில்லாது காணப்படும் பிற நாடுகள், பிற மாநிலங்கள், குக்கிராமங்கள், மதமாற்ற தடைசட்டங்களோடு உள்ள இடங்களுக்காக பாரத்தோடு ஜெபிப்போம்.