ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 21 புதன்

தேவரீர் பூமியை விசாரித்து, அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; இப்படி நீர் அதைத் திருத்தி அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர் (சங்.65:9) என்ற வேதவாக்கு நீரின்றி தவிக்கிற உலகின் பலபாகங்களிலுமுள்ள மக்களுக்கு நிறைவேறவும், நமது தேசத்தையும் கர்த்தர் அவ்விதமே ஆசீர்வதித்து, அந்த நன்மைகளிலிருந்து பேரிடரில் இருக்கும் நாடுகளுக்கு உதவி செய்வதில் சிறந்த நாடாக காணப்படுவதற்கும் ஜெபிப்போம்.