ஜெபக்குறிப்பு: 2026 நவம்பர் 26 வியாழன்

சமாதானத்திற்கு காரணராயிருக்கிற நமதாண்டவர் தாமே மனவேற்றுமையினாலும், முற்பகையினாலும், மனக்கசப்புகளோடு பிரிந்திருக்கிற குடும்பங்களில் சமாதானத்தைத் தந்து, பிரிந்துள்ள உறவுகள் மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழவும், கிறிஸ்துவின் அன்பும் ஐக்கியமும் ஒருமனமும் அங்கு காணப்படவும் கர்த்தர் நாமம் மகிமைப்படவும் ஜெபம் செய்வோம்.