மார்ச்-ஏப்ரல் 2021
[1]
Dear Bro. Greetings to you all in the most blessed name of our Lord and Saviour Jesus Christ. Thank you for your magazines and daily meditation book, which we are receiving. God bless you all and Sathiyavasanam Ministry.
Mrs.W.Manoharan, Chennai.
[2]
…. 2020 ஆம் வருடம் முழுவதும் வேதாகமத்தை முழுவதும் வாசித்து முடிக்க கர்த்தர் கிருபை செய்தார். தொடர்ந்து வாசிக்கிறேன்.
Mrs.Sarojini Arumai raj, Thiruvellore.
[3]
தாங்கள் அனுப்பும் அனைத்து சத்தியவசன பத்திரிக்கைகளும் தவறாமல் கிடைக்கப்பெற்று வருகிறோம். அவைகளை வாசித்து ஆவிக்குரிய வாழ்வில் மிகவும் பயனடைந்து வருகிறோம். நன்றி. ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோம்.
Mrs.Annie Gunaseelan, Nilgiris.
[4]
சத்தியவசன செய்திகளை வாட்ஸ்அப் மூலம் பெற்றுவருகிறேன். Updated whatsapp என்று சில நாட்கள் செய்திகள் வரவில்லை. இப்போது தொடர்ந்து தவறாமல் பெற்றுவருகிறேன். நன்றி கூறுகிறேன். சத்திய வார்த்தைகளை நானும் வாசித்து என் ஆவிக்குரிய நண்பர்களுக்கும் அனுப்புகிறேன். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.
Bro.Solomon, Chennai.
[5]
சத்தியவசன ஊழியங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபித்து வருகிறேன். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை காலையில் படித்து தியானித்து ஜெபித்து வருகிறேன். சத்தியவசன சஞ்சி கையையும் தவறாமல் படித்து வருகிறேன். மிகவும் ஆறுதலாகவும் பயனுள்ளதாகவும் செய்திகள் அமைந்துள்ளது. கர்த்தரைத் துதிக்கிறேன்.
Mrs.Juliet Jebaraj, Chennai.
[6]
Dear Brother in Christ, Greetings to you in the name of our Lord Jesus Christ, We regularly watch your programme on Sundays. God bless the Ministry many souls.
Sis.Esther S.P.Gladwin, Chennai
[7]
சத்தியவசன செய்திகளை வாட்ஸ் அப்பில் பெற்றுவருகிறேன். மார்ச் 3ஆம் தேதியன்று கண்ணீரோடு ஜெபித்து கொண்டிருந்தேன். ஏசாயா 43:18,19 வசனத்தை ஆண்டவர் வாக்கு கொடுத்தார். அந்த நாளின் தியான செய்தியில் அதே வசனத்தைதான் நீங்களும் கொடுத்து இருக்கிறீர்கள். மிகவும் நன்றி ஐயா, கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக.
Bro.D.Isaac.
[8]
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரருக்கு, 2020ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட கால அட்டவணைப்படி வேதாகமத்தை வாசித்து முடிக்க தேவன் கிருபை செய்தார். சத்தியவசன ஊழியத்தின் மூலம் நடைபெறும் ஊழியங்களுக்காகத் தேவனைத் துதிக்கிறேன். ஒவ்வொருநாள் தியான பகுதியும் வாழ்க்கைக்கு அதிக பயனுள்ளதாக உள்ளது. ‘நொறுங்குண்ட இருதயம்’ என்ற தலைப்பில் அன்னாளைப் பற்றிய மூன்று காரியங்கள் கொடுக்கப்பட்டன. நாமும் நொறுங்குண்ட இருதயத்தோடு பிறரைப் பற்றிக் குறை கூறாமல் ஜெபிக்கும்போது நம்முடைய வாழ்வில் சந்தோஷத்தைப் பெறமுடியும் என்று தெளிவாக எழுதப்பட்டிருந்தது. தொடர்ந்து சத்தியவசன ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.
Mrs.P.Gnanamani Hepzipah, Vellalanvilai.