ஜனவரி-பிப்ரவரி 2022

[1]
அன்புள்ள சத்தியவசன ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த தொற்றின் நாட்களிலும் கர்த்தருடைய பெரிதான கிருபையால் நலமாக இருக்கிறோம். தேவன் போதுமானவராக இருக்கிறார். அனுதினமும் கிறிஸ்துவுடன் செய்திகள் மிகவும் ஆறுதலாகவும் இக்காலத்திற்கு உரியதாகவும் இருக்கிறது. சகோதரி சாந்தி பொன்னு மற்றும் தியானங்களை எழுதுகிற மற்ற ஊழியர்களையும் கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன்.

Mr.Richard Sam Alex, Chennai.


[2]
தங்களுக்கு என்னுடைய அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள். சத்தியவசன காலண்டர், அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகம் சரியான நேரத்தில் கிடைத்தது. மிக்க நன்றி. அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை முழுவதுமாக 2021 ஆம் ஆண்டில் வாசித்து முடித்துவிட்டேன். இந்த ஆண்டிலும் ஆரம்பம் முதல் வாசித்துக்கொண்டிருக்கிறேன். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

Mrs.Sarojini Moses, Dohnavur.


[3]
கர்த்தருக்குள் அன்பான சத்தியவசன ஊழியருக்கு, சத்தியவசன பத்திரிக்கைகள் தவறாமல் அனுப்புவதற்கு மிக்க நன்றி. தியானபுத்தகமும், சஞ்சிகையும் மிகவும் அருமையாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்கிறது. ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mrs.Vimala Rajkumar, Madurai.


[4]
அன்புள்ள சகோதரருக்கு ஸ்தோத்திரம். சத்தியவசனம் ஏடு படிக்கும்போதே எல்லாவற்றையும் படிப்பதற்கான ஆர்வம் அதிகமாக ஏற்படுகிறது. வேதவசன விளக்கங்களை அறிந்துகொள்ள முடிகிறது. நன்றி.

Mr.D.Epiphany Pushparaj Vincent, Vellore.


[5]
சத்தியவசன ஆசிரியர் அவர்களுக்கு புதிய வருடத்தின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். 2021 ஆம் ஆண்டில் தியானபுத்தகத்தின் அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை ஒருமுறை வாசித்து முடித்துவிட்டேன். ஒவ்வொரு வருடமும் இதேபோல் வாசித்து வருகிறேன். வருடமுழுவதும் தவறாமல் பத்திரிக்கையை அனுப்பியிருந்தீர்கள். நன்றி.

Mr.D.Mangaladoss, Arakkonam.


[6]
Dear Brother in Christ, Greetings to you in the precious Name of our Lord Jesus Christ, We as family are praying for your Ministry. Daily devotion Anuthinamum Christhuvudan is very very useful for us.

Mr.G.Thilaka Roy, Nagercoil.


[7]
Dear Brother in Christ, Received Monthly Magazine and New year Calendar. Thank you for the Lord. We thanks to Sis.Shanthi ponnu for daily blessing Sathiyavasanam Message. God bless the Sister needs and we daily listening the Anuthinamum Christ huvudan devotion in your youtube channel. Really very nice video message. God bless Sathiya Vasanam Director and all office staff. Jesus bless all needs through out this year.

Mr.Thangaraja, Chennai.